எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் குளோபல் லீடர் அப்ரூவல் டிராக்கர் என்ற அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, 75 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி உலகின் மிகவும் நம்பகமான தலைவர் பட்யலில் முதலிடத்தில் உள்ளார். 59 சதவீத ஆதரவுடன் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் 2ம் இடத்திலும், 57 சதவீத ஆதரவுடன் அர்ஜென்டினா அதிபர் ஜாவிஸ் மில்லி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கனடா அதிபர் மார்க் கார்னி 4வது இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் அண்டனி அல்பானீஸ் 5வது இடத்திலும் உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 44 சதவீத ஆதரவுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். இந்த தகவலை பகிர்ந்துள்ள பாஜக தலைவர்கள், உலக அளவில் வலுவான மற்றும் மதிப்பான தலைவர் மோடியின் கையில் நாடு உள்ளது என்பதையே இது உணர்த்துவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.